Dhanush GV Prakash: நடிகர் தனுஷும், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் நெருக்கமான நண்பர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். துவக்கத்தில் தனுஷின் எல்லா படங்களுக்கும் அனிருத் இசையமைத்து வந்தார். ஆனால் அவர்களுக்கிடையே உரசல் ஏற்பட ஜிவி பிரகாஷ் பக்கம் போனார் தனுஷ். தனுஷ் நடித்த மயக்கம் என்ன, பொல்லாதவன், மாறன், கேப்டன் மில்லர், சார், ஆடுகளம், அசுரன், அவர் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இப்போது இயக்கி நடித்துள்ள இட்லி கடை உள்ளிட்ட எல்லா படங்களுக்கும் ஜிவி பிரகாஷ்தான் இசையமைத்திருக்கிறார்.
இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜிவி பிரகாஷ் ‘ராயன் படத்தில் அவரின் தம்பிகளில் ஒருவராக என்னை நடிக்க கேட்டார் தனுஷ். ஆனால் அது அவருக்கு துரோகம் செய்யும் கதாபாத்திரம். கதையில் கூட நான் தனுஷுக்கு துரோகம் செய்ய மாட்டேன். அவரின் முதுகில் குத்தும் நாலு பேரில் ஒருவராக நான் இருக்க மாட்டேன்’ என்று ஃபீலிங்கோடு பேசினார்.
இந்நிலையில்தான் பிரபல சினிமா செய்தியாளர் வலைப்பேச்சு அந்தணன் ஊடகம் ஒன்றில் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார். பல வருடங்களுக்கு முன்பு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் சார்பாக விருது கொடுக்கும் விழா ஒன்று நடந்தது. அதில், அந்த வருடத்திற்கான சிறந்த நடிகராக விஜயை தேர்ந்தெடுத்தனர். அந்த விழாவில் கலந்து கொள்ள விஜயை அவர்கள் அணுகிய போது அவரோ அந்த விழாவுக்கு வர முடியாது என மறுத்துவிட்டார்.
எனவே தனுஷை தொடர்பு கொண்டு ‘சிறந்த நடிகர் விருதை உங்களுக்கு கொடுக்கிறோம். நீங்கள் விழாவில் கலந்து கொள்ள முடியுமா?’ என கேட்டார்கள். தனுஷும் சம்மதித்தார். இதை தெரிந்து கொண்ட ஜிவி பிரகாஷ் ‘விஜய்க்கு கொடுக்க வேண்டிய விருதை நீங்கள் எப்படி தனுஷுக்கு கொடுக்கலாம்?’ விஜயும் தனுஷும் ஒன்னா?’ என சண்டை போட்டார்.
இது எல்லாமே திரை மறைவில் நடந்த சம்பவங்கள். அதன்பின் இதை பொதுவெளியிலும் சொல்லி தனுஷையும் அசிங்கப்படுத்தினார். ஆனால் இப்போது அவருடன் நெருக்கமாகி பீலிங்கோடு பேசி வருகிறார்’ என போட்டு உடைத்திருக்கிறார் அந்தணன்.