மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை ... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!
Dinamaalai September 16, 2025 06:48 PM

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி இவைகளால்  தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில்  வர்த்தகப் போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது.


செப்டம்பர்  12ம் தேதி  தங்கத்தின் விலை உச்சம் தொட்ட நிலையில் நேற்று சற்றே குறைந்து ஆறுதலை அளித்தது.  நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ10 குறைந்து ஒரு கிராம் ரூ10210க்கும், சவரனுக்கு ரூ80 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ  ரூ,81,680க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.   இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ70 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ10280க்கும், சவரனுக்கு ரூ560 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 82,240க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளி விலையும் இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.144க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,44,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.