கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்... இளம்பெண் கைது!
Dinamaalai September 16, 2025 07:48 PM

ராஜாக்கமங்கலம் அருகே கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூர தாயை போலீசார் கைது செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள சம்பக்குளத்தில் கடந்த 11ம் தேதி பச்சிளம் குழந்தை சடலமாக தலை இல்லாமல் மிதந்து வந்த வழக்கில், பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூர தாயான ஈத்தாமொழி புதூர் பகுதியை சேர்ந்த ரேகா(38) என்ற பெண்ணை  போலீசார் கைது செய்தனர்.

வாலிபருடன் ஏற்பட்ட கள்ளக்காதலில் பிறந்ததால் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது அம்பலமானது-இதனை தொடர்ந்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் இந்த பெண்ணுக்கு இரண்டு மகன்கள்,இரண்டு மகள்கள் உள்ளதும், கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது..

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.