நெல்லை அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் எதிரொலியாக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 13 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் மாணவர்கள் இரு தரப்பினராக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பள்ளிக்குச் சென்ற போலீசார் மேற்கொண்டு பிரச்சனைகள் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோஷ்டி முதலில் ஈடுபட்டதாக கூறப்படும் இரு தரப்பை சேர்ந்த 13 மாணவர்களை கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மேலும் நேற்று மாணவர்களுக்கு தேர்வு என்பதால் அறிவுரை வழங்கி அதிகாரிகள் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?