அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!!
Seithipunal Tamil September 16, 2025 09:48 PM

ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஒவ்வொரு விதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கத்தின் விலையை கண்காணித்தபடி வருகின்றனர். அந்த வகையில், இன்றைய விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூ.10,210-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ. 81,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,280-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 82,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 144 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.