கன்னியாகுமரியில் நடந்த பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற தி.மு.க. எம்.பி. கனிமொழி, அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் தி.மு.க.வை விமர்சிப்பது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
"புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும், தி.மு.க.வைப் பற்றி பேசினால் தான் அவர்களுக்கு ஓர் அடையாளம் கிடைக்கும். அதனால்தான் அவர்கள் எப்போதும் தி.மு.க.வை விமர்சனம் செய்வார்கள்" என்று கனிமொழி தெரிவித்தார்.
மேலும், "தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமையாகவும், சிந்தனை மற்றும் அரசியல் நிலையின் போக்கை மாற்றியமைத்த பெருந்தகை அண்ணா. அவரது வழிகாட்டுதலின்படிதான் தற்போது தி.மு.க.வின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது" என்றும் அவர் கூறினார்.
Edited by Mahendran