பேரறிஞர் திரு.அண்ணாதுரை அவர்கள் பிறந்ததினம்!.
Seithipunal Tamil September 16, 2025 02:48 PM

திராவிட தலைமகன்' தமிழக முன்னாள் முதலமைச்சர், பேரறிஞர் திரு.அண்ணாதுரை அவர்கள் பிறந்ததினம்!.

 தமிழக அரசியல் களத்தில் திராவிட இயக்கத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா சி.என்.அண்ணாதுரை 1909ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார்.

இவர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் சேர்ந்தார். பிறகு தி.க.வில் இருந்து விலகி 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார்.

 இவர் மாநிலங்களவை உறுப்பினராக 1962-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று, முதல்வரானார். இவரே மதராஸ் மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றினார்.

 அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த சி.என்.அண்ணாதுரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது 59-வது வயதில் 1969  பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று  மறைந்தார். இவரது இறுதிச் சடங்கில் சுமார் ஒன்றரை கோடி மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

"தமிழ்த் தந்தை" திரு.மறைமலை அடிகள் அவர்கள் நினைவு தினம்!.

 மறைமலை அடிகள் (சூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர்.

 பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுட்பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.