ஆண்டவருக்கு பூஜை போட்டதோடு சரி.. இன்னும் திரைக்கு வராமல் கமலுக்கு இவ்வளவு படங்கள் இருக்கா?
CineReporters Tamil September 16, 2025 02:48 PM

உலகநாயகன் கமலஹாசன் நடித்து பாதியில் நிறுத்தப்பட்ட மற்றும் பூஜையோடு நின்று போன படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

அதில் முக்கியமான திரைப்படம் ’மருதநாயகம்’ இந்த படத்தினுடைய புகைப்படங்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பாடல்களும் மிக அருமையாக இருந்தது. மேலும் அவரின் கெட்டப் காண்போரை மிரள வைக்கும் விதமாக இருக்கும். இந்த திரைப்படத்தில் மிகவும் சிரமப்பட்டு கமல் நடித்திருப்பார்.

இதுவரை கண்டிராத மனிதர்கள் போக முடியாத மலைப் பகுதியில் காடுகளிலும் இந்த படத்தை எடுத்திருப்பார்கள். மிகவும் பிரம்மாண்டமாகவும் இதுவரை பார்க்காத கோணத்திலும் இந்த படத்தை கமல் எடுத்திருப்பார். இவ்வளவு ஹைப்பை ஏத்தி விட்டு படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இன்று வந்தால் கூட கமலின் பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

#image_title

’எந்திரன்’ இந்த திரைப்படத்தை பொறுத்தவரை முதலில் கமல்ஹாசன்தான் நடிப்பதாக இருந்தது. அதற்காக பல போட்டோ சூட் நடத்தப்பட்டது. இந்த சமயத்தில் இயக்குனர் சங்கருக்கும் கமலுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக படம் கைவிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் கமல் நடித்திருந்தால் எங்கேயோ போயிருப்பார். அவர் இந்த படத்திலிருந்து விலகியது கமல் ஹாசன் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும்.

அடுத்ததாக ’மர்மயோகி’ இந்த படத்திற்கு பிரம்மாண்ட பூஜை நடைபெற்றது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் படத்தின் கதையோடு ஒன்றி வந்தாலும் இதில் கமலின் கதாபாத்திரம் சற்று மாறுபட்டு இருக்கும். படபிடிப்பும் சில நாட்கள் நடந்தது. இயக்குனர் மற்றும் ப்ரொடியூசர் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இந்த படம் கைவிடப்பட்டது. அதன் போட்டோ ஷூட் பார்த்தாலே பயங்கரமாக இருக்கும். முரட்டுத்தனமான கெட்டப், தாடியுடன் விருமாண்டி மீசையுடன் இருக்கும். இந்த படமும் வந்திருந்தால் கமலின் கெரியரில் சூப்பர் ஹிட் படமாக வந்திருக்கக்கூடும்.

#image_title

அதன் பிறகு ’கண்டேன் சீதையை’ என்ற படம். பிரம்மாண்ட கட் அவுட் வைத்து இந்த படத்தை வரவேற்க கமலின் ரசிகர்கள் தயாராக இருந்தனர். இந்த படத்தின் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதில் கிட்டத்தட்ட அவ்வை சண்முகி மாதிரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கமல்.

’லேடிஸ் ஒன்லி’ இந்த திரைப்படத்தின் ஒரிஜினல் வெர்ஷன் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த மகளிர் மட்டும் என்ற திரைப்படம் தான். இதை ரீமேக் செய்து ஹிந்தியில் லேடிஸ் ஒன்லி என்று வெளியாக இருந்தது. இதில் நாகேஷ் பாத்திரத்தில் கமல் நடித்தார். தமிழில் கலக்கலான சூப்பர் ஹிட் காமெடி திரைப்படமாக இருந்தது. திரைப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கையில் பல நெருக்கடிகள் வந்தது. இது நடித்த நடிகைகள் ப்ரொடியூசுடன் தகராரில் ஈடுபட்டனர். அதனால் இந்த படத்தை எடுத்தவரை போதும் என்று அதோடு டிராப் செய்துவிட்டார்கள்.

மீண்டும் அதே பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன் கமல் இணைந்து நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வந்தது. அதன் புகைப்படங்களும் தினசரி நாளிதழில் கூட வெளியாகி இருந்தது. படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்டது. கடைசியில் அமிதாப்பச்சன் இந்த படத்தில் நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று விலகி விட்டார். அதனால் இந்த படம் அப்படியே கைவிடப்பட்டது இதில் நடித்திருந்தால் கமல் நிச்சயம் பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்து இருப்பார்.

லைக்கா தயாரிப்பில் ’சபாஷ் நாயுடு’ என்ற திரைப்படத்தில் சுருதிஹாசன் உடன் இணைந்து நடிப்பதாக இருந்தது. தசாவதாரம் திரைப்படத்தில் வந்த பலராம் நாயுடு கதாபாத்திரத்தில் தான் இதில் நடித்திருப்பார். கலக்கலான காமெடி திரைப்படமாக வந்திருக்க வேண்டியது. வெளியாகி இருந்தால் கண்டிப்பாக வேற லெவல் ஹிட்டு கொடுத்திருக்கும். ஆனால் இந்த படமும் அறிவிப்பு வந்த கையோடு நின்று போனது.

அடுத்ததாக ’தலைவன் இருக்கிறான்’ என்ற திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அறிவிப்பு போஸ்டர் வெளிவந்தது. இந்த படமும் பூஜையோடு நின்று போனது. இயக்குனரோடு ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த படம் நின்று போனது.

அடுத்ததாக ’அதிவீரபாண்டி’ என்ற திரைப்படம் இதில் இளையராஜா இசையமைக்க கங்கை அமரன் இயக்குவதாக இருந்தது. இந்த படத்திற்கும் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு நடந்தது. கங்கை அமரனுக்கும் இளையராஜாவுக்கும் பாடல்கள் விவகாரத்தில் பயங்கர வாக்குவாதங்கள் ஏற்பட்டது. இதை பார்த்த கமல்ஹாசன் நீங்கள் இருவரும் பேசி முடித்து விட்டு வாருங்கள். என்று கிளம்பி விட்டார். அதோடு இந்த படமும் நின்று போனது.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் கமல்ஹாசன் இணைந்து நடிப்பதாக இருந்த திரைப்படம் ’நாளை நமதே’. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த படமும் பாதியிலேயே கைவிடப்பட்டது.

இவ்வளவு படங்கள் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பூஜையுடனும் படப்பிடிப்பு ஆரம்பித்து பாதியிலேயே நிறுத்தப்பட்ட படங்கள் இவை. இந்த படங்கள் வெளியாகி இருந்தால் கமலஹாசன் இன்னும் அடுத்த நிலைக்கு போயிருப்பார். அரசியலுக்கு கூட சென்று இருக்க மாட்டார் என்பது கமல் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.