இன்று முதல் 19ம் தேதி வரை 5 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று திருவண்ணாமலை, தர்மபுரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 16ம் தேதி ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 17ம் தேதியன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தஞ்சை, நாகை, திருவாருர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 18 அன்று நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 19 அன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Edit by Prasanth.K