தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களாக விளங்குபவர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன். டிவி தொகுப்பாளராக தன்னுடைய வாழ்க்கையை பயணித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு வெள்ளி திரையில் அறிமுகம் கொடுத்தார் தனுஷ். 3 படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள் அதன்பின் தனுஷ் தயாரித்து சிவகார்த்திகேயன் நடிப்பில் எதிர்நீச்சல் திரைப்படம் உருவானது.
அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் சிவகார்த்திகேயனுக்கு தமிழ் சினிமாவில் ஹீரோக்கான ஓபனிங் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பல படங்களில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இன்று டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தனுஷும் தொடர்ந்து தனது பன்முக திறமையின் மூலம் ரசிகர்களை என்டர்டைன் செய்து வருகிறார். இதற்கிடையில் தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஏற்றி விட்டவரை விரட்டி விட்டவர் என்ற பெயருக்கு ஆளானார் சிவகார்த்திகேயன்.
உண்மையில் இவர்கள் இருவருக்கும் இடையில் என்னதான் நடந்தது என்பதை கூறியுள்ளார் வலைப்பேச்சு அந்தணன் மேலும் அதில், ”சிவகார்த்திகேயன் கானா படத்தை தயாரித்திருந்தார். அந்த படத்தை அவரின் நண்பர் அருண் ராஜா காமராஜ்தான் இயக்கியிருந்தார். அதன் இசை வெளியீட்டு விழா மேடையில் பேசும் பொழுது என் மேல் எதிர்நீச்சல் படம் பண்ணும் பொழுது தனுஷ் சார் என்ன நம்பிக்கை வைத்திருந்தாரோ அதை நம்பிக்கைதான் நான் என் நண்பன் மீது வைத்துள்ளேன் என்று கூறியிருந்தார்”.
”அவ்வளவு நெருக்கமாய் இருந்தவர்கள் பிரிந்ததற்கான காரணம் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக உயர்ந்த பின்னர் தனுஷ் சிவகார்த்திகேயனிடம் தேதி கேட்கிறார். அதுவரை கொடுக்கிற சம்பளத்தில் நடித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் தனக்கென்று ஒரு சம்பவம் நிர்ணயித்த பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்தது. சிவகார்த்திகேயன் சொன்ன சம்பளத்தை கேட்டவுடன் தனுஷ் ஆடிப் போய்விட்டார்”.
”இவ்வளவு சம்பளம் கொடுக்கிற அளவுக்கு என்னுடைய கம்பெனி பெரிய கம்பெனி அல்ல என்று தனுஷ் ஒதுங்கி விட்டார். இதுதான் பிரச்சனைக்கான காரணம். ஆனால் மேடைகளில் பேசும் பொழுது இருவரும் ஒருவருக்கொருவர் எதிரிகள் என்று காண்பித்துக் கொள்வதில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது நாம் முட்டாளாகி விடுவோம். ஆனால் உண்மையில் இவர்கள் மேடையில் பேசுவது வேற நிஜத்தில் நடப்பது வேற. ஒரு அரசியல்வாதிக்கு பாடம் கற்றுக் கொடுக்கிற அளவுக்கு கைதேர்ந்த நடிகர்கள் எல்லாம் இங்கே இருக்கிறார்கள்”. என்று கூறியுள்ளார்.