திருச்சியில் கூடிய கூட்டம்.. விஜய் மனதில் ஏற்பட்ட மாற்றம்? - போட்டியிட போகும் தொகுதி எது?
Webdunia Tamil September 17, 2025 01:48 PM

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பரப்புரையில் ஈடுபட தொடங்கியுள்ள விஜய், எந்த தொகுதியில் போட்டியிடுவார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பரப்புரையில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார் தவெக தலைவர் விஜய். முன்னதாக மதுரையில் நடந்த மாநாட்டில் ஏராளமான தொண்டர்கள் கலந்துக் கொண்ட நிலையில், விஜய் மதுரையில் போட்டியிடுவாரா என்ற கேள்விகள் இருந்து வந்தது.

ஆனால் தற்போது திருச்சி பிரச்சாரம் விஜய்க்கு அசைக்க முடியாத நம்பிக்கையை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. மாநிலத்தின் மையமாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விஜய் விரும்புவதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் எந்தெந்த தொகுதிகளில் விஜய் நேரடியாக போட்டியிட்டால் வெற்றி பெற அதிகம் வாய்ப்புள்ளது என தவெக தயாரித்துள்ள தொகுதிப்பட்டியலில் திருச்சி கிழக்கு முக்கிய இடத்தில் உள்ளதாம்.

அதற்கு ஏற்றாற்போல் கடந்த சனிக்கிழமை விஜய் திருச்சிக்குள் மக்கள் கடலில் மிதந்து வரும் அளவிலான சூழல் நிலவியது விஜய்க்கும் மேலும் நம்பிக்கையை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் விஜய் எந்த தொகுதியில் போட்டியிட திட்டமிடுகிறார் என்பதை திமுகவினரும் கூர்ந்து நோக்கி வருகிறார்களாம். அந்த தொகுதியில் நட்சத்திர வேட்பாளராக நிறுத்தி விஜய்க்கு சரியான போட்டியை தர திட்டமிட்டு வருவதாக தகவல்.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.