தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய விஜய் கடந்த சனிக்கிழமை திருச்சி மற்றும் அரியலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து பெரம்பலூரில் பிரச்சாரம் மேற்கொள்வதாக இருந்த நிலையில் இரவு நீண்ட நேரம் ஆனதால் அது ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி நாகை உள்ளிட்ட பகுதிகளில் நடிகர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் பிரச்சாரம் செய்ய நடிகர் விஜய் அனுமதி கேட்டு காவல்துறையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது பிரச்சாரம் செய்ய அனுமதிக்கோரிய விண்ணப்பத்தை பாரபட்சமின்றி பரிசீலிக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட அறிவுறுத்தும் படி அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகளுக்கு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அந்தக் கட்சியின் நிர்மல் குமார் வழக்கு தொடர்ந்த நிலையில் அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் நீதிபதிகள் நாளை விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.