BiggbossTamil9: அசீமை அசிங்கப்படுத்திய முத்துகுமரனை பழி தீர்க்கும் ரசிகர்கள்! சரிதான்…
CineReporters Tamil September 17, 2025 09:48 PM

BiggbossTamil9: பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் 9ல் கலந்துக்கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் கசிந்து வரும் நிலையில் பழைய சீசன் பிரச்னையும் தொடங்கி இருக்கிறது.

பிக்பாஸ் தமிழும், ரசிகர்களும்: 

ஹிந்தியில் புகழ்பெற்ற இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழுக்கு எடுத்து வரும்போது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதை பூர்த்தி செய்யும் வகையில் முதலில் சீசன் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் பெற்றது.

அந்த சீசனில் கலந்துகொண்ட ஓவியா ரசிகர்களிடம் தனக்கென ஒரு ஆர்மியை உருவாக்கும் அளவு புகழ்பெற்றார். ஆனால் அதை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. இதை தொடர்ந்து மற்ற சீசன்களிடம் ரசிகர்களிடம் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வந்தது.

மூன்றாவது சீசனில் இருந்த பாய்ஸ் கேங், நான்காவது சீசனில் மொத்த போட்டியாளர்களிடம் தனியாக விளையாடிய ஆரி, ஐந்தாவது சீசனில் காமெடியில் அசத்தி விஜய் டிவியின் செல்லப்பிள்ளை பிரியங்காவிடமிருந்து டைட்டிலை தட்டிப்பறித்த ராஜு என ஒவ்வொரு சீசனிலும் அல்டிமேட் விஷயங்கள் நடந்து வந்தது.

 முதல் ஆறு சீசன்களிலும் இல்லாத வகையில் ஏழாவது சீசனில் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களிடம் ஒரு நெகட்டிவிட்டியை பரப்பி வந்தனர். பெரிய டாஸ்குகள் கொடுக்கப்படாமல் சும்மா இருந்தே நேரம் செலவழித்து பேசியே கண்டெண்ட் பிடித்தனர். 

azeem muthukumaran

எப்போதும் போல இல்லாமல் அந்த சீசனில் பிரதீப் ஆண்டனியை போட்டியாளர்கள் முடிவில் படி கமல்ஹாசன் வெளியேற்றியது சலசலப்பையே ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து எட்டாவது சீசனில் கமல்ஹாசன் வெளியேற விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

எட்டாவது சீசன் டைட்டில் வின்னர்

பரபரப்பாக தொடங்கிய எட்டாவது சீசனிலும் பெரிய அளவில் டாஸ்குகள் இல்லை. ஆனால் விஜய் சேதுபதி போட்டியாளர்கள் செய்யும் தவறை அப்பட்டமாக வார இறுதி எபிசோடுகளில் கண்டித்தது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் நான்காவது வாரங்களின் முடிவு செய்யப்பட்டு விடுவார்.

ஆனால் இந்த முறை யாருக்கு டைட்டில் கிடைக்கும் என பெரிய விவாதம் கடைசி வாரம் அதை நீடித்தது. தொடர்ந்து டைட்டிலை தொகுப்பாளர் முத்துக்குமரன் தட்டி சென்றது ரசிகர்களிடம் பெரிய அளவில் ஈர்ப்பை கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அசீம் மீதான வன்மம்

டைட்டிலைத் தட்டிய முத்துக்குமரன் அதன்பின் கொடுத்த பேட்டிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது டைட்டில் வின்னரான அசீமை கைகாட்டி அவர் தன்னை நெகட்டிவ் ஆக காட்டிக் கொண்டார். ஆனால் அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை என மட்டமாக பேசி இருப்பார்.

biggboss 9

 அப்போதே அந்த வீடியோ வைரலாகி அடுத்த வருடம் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என நாங்களும் பேசுகிறோம் என அசீம் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தற்போது மீண்டும் அந்த வீடியோவை வைரலாக்கி வரும் ரசிகர்கள் முத்துக்குமரனை தேடி வருகிறோம் எனக் கலாய்த்து கொண்டு உள்ளனர். 

பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்கள்

இதற்கிடையில் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி ஒன்பதாவது சீசன் தொடங்க இருக்கும் நிலையில் அதில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர் குறித்த உத்தேச பட்டியல் கசிந்து இருக்கிறது.

  • ஸ்ரீகாந்த் தேவா
  • பரீனா ஆசாத்
  • யூடியூபர் அஹமத் மீரன்
  • யுவன் மயில்சாமி
  • புவிஅரசு
  • ஜனனி அசோக்குமார்
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.