முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் அறிக்கை,
அதிமுக உள்கட்சியை பஞ்சாயத்திற்குத்தான் எடப்பாடி டெல்லி சென்றார் என்பது நாட்டு மக்கள் அனைவர்க்கும் தெரியும். ஆனால் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை வைக்க சென்றதாக வெளியில் அண்டப்புளுகை அவிழ்த்துவிடுகிறார். தனது சுயநல அரசியலுக்காக பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பயன்படுத்துவதை மானமுள்ள தேவர் சமூகம் பொறுத்துக்கொள்ளாது.
அமித்ஷாவை சந்தித்துவிட்டு சென்றதை அதிகாரபூர்வமாக அறிவித்தால் தனது உள்கட்சி விவகாரத்தின் முகமூடி கழண்டுவிடும். அதனால்தானே முகத்தை மூடிகொள்கிறார் பழனிச்சாமி!
எடப்பாடியின் தில்லுமுல்லு சந்தர்ப்பவாத துரோக அரசியலுக்கு தேவர் சமுதாயத்தை காக்கா பிடிக்க இந்தச் சந்திப்பை தேவருக்காக என்று மடைமாற்றுகிறார் எடப்பாடி.
உண்மை உலகத்திற்கு தெரியும். எடப்பாடி தேவர் சமுதாயத்திற்கு இழைத்த துரோகங்களை தேவர் சமுதாயம் மறந்துவிடவில்லை. முகமூடி மாட்டிக் கொண்டு திரியும் எடப்பாடியின் முகத்திரையை கிழிப்போம்!
சேது. கருணாஸ் தலைவர். முக்குலத்தோர் புலிப்படை