“இரும்பு கேட்டை திறந்ததும் பயங்கர சத்தம்”… மருமகள் என்றும் பாராமல் துடிக்க துடிக்க… தீராத வெறியில் மாமனார்… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பெண்… பரபரப்பு சம்பவம்…!!!
SeithiSolai Tamil September 17, 2025 07:48 PM

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசிங்கம். அவரது மகன் சதீஷ் மதுரையில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சதீஷின் மனைவி ராஜபிரியா (38), பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவருக்கும், மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு நிலவி வந்தது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தகராறு மோசமாக வளர்ந்ததால், சதீஷ் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தந்தை வீட்டுக்குச் சென்று விட்டார். ராஜபிரியா அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று மாலை, ராஜபிரியா தனது வீடிற்கு வந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது மாமனாரும், தாய்மாமாவுமான துரைசிங்கம் அங்கு வந்துள்ளார். இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், துரைசிங்கம் தான் மறைத்து வைத்திருந்த கூரிய கத்தியால் ராஜபிரியாவை பலமுறை குத்தியுள்ளார். இதில் ராஜபிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீட்டின் முன் நின்றபடி மரணமடைந்த ராஜபிரியாவை கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

இந்தக் கொலைக்குப் பிறகு, துரைசிங்கம் நேரடியாக தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்துக்குச் சென்று, “நான் என் மருமகளைக் கொலை செய்துவிட்டேன்” என கூறி சரணடைந்தார். தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, ராஜபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு துரைசிங்கத்தை கைது செய்துள்ளனர். கொலைக்கான முழுமையான காரணம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம், பழனிசெட்டிபட்டி மற்றும் தேனி சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.