திமுகவின் முப்பெரும் விழா 17.09.2025 அன்று மாலை 5 மணிக்கு கரூர் மாவட்டம் கோடங்கிப்பட்டியில் நடைபெறவுள்ளது.
திமுகவின் முப்பெரும் விழா 17.09.2025 அன்று மாலை 5 மணிக்கு கரூர் மாவட்டம் கோடங்கிப்பட்டியில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் பெரியார் விருது திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழிக்கும், அண்ணா விருது பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் சுப. சீத்தாராமனுக்கும், கலைஞர் விருது சட்டப்பேரவை முன்னாள் உருப்பினர் ராமச்சந்திரன் அவர்களுக்கும், பாரிவேந்தர் விருது திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் குளித்தலை சிவராமனுக்கும் வழங்கப்படவுள்ளது. இதேபோல் பேராசிரியர் விருது சட்டப்பேரவை முன்னாள் கொரடா மருதூர் இராமலிங்கத்துக்கும், மு.க.ஸ்டாலின் விருது ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளர் பொங்கலூர் நா.பழனிசாமிக்கும் வழங்கப்படவுள்ளது. மேற்கண்ட விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்.