'ப்ரீ பயர்'விளையாட்டு வாக்குவாதம் மோதலாக மாறி, 13 மாணவர்கள் கைதான நெல்லை சம்பவம்! நடந்தது என்ன?
Seithipunal Tamil September 17, 2025 07:48 PM

நெல்லை சுத்தமல்லியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள், தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து செல்போனில் பிரபலமான ‘ப்ரீ பயர்’ ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளனர்.

இதில் நேற்று காலை அந்த கேமின் போது ஏற்பட்ட சிறிய வாக்குவாதம், சில நொடிகளில் இரு பிரிவுகளுக்கிடையே கடும் மோதலாக மாறியது.

இந்த சண்டை நிலை உருவானதால், பள்ளி வளாகமே பரபரப்பாகியது. இதனால்,அதிர்ச்சியடைந்த தலைமையாசிரியர் உடனடியாக சுத்தமல்லி காவலருக்கு தகவல் கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து விரைந்து வந்த காவலர்கள், இரு தரப்பினரையும் பிரித்து கட்டுப்படுத்தினர்.அதன் பிறகு, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 13 மாணவர்களை கைது செய்து, நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து, அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.இச்சம்பவம் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, மாணவர்கள் உலகம் தழுவி பரவி வரும் ஆன்லைன் விளையாட்டுகளின் ஆபத்துகளை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.