ரஜினி பட்ட அவஸ்தை தான் விஜய்யும் படுகிறார்.. இனி நோ எஸ்கேப்.. பிரபலத்தின் பகீர் தகவல்..
CineReporters Tamil September 17, 2025 10:48 PM
உச்ச நட்சத்திரம் :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் ரஜினி மற்றும் விஜய். இன்றும் இவர்கள்தான் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார்கள். 75 வயதை கடந்து இன்றும் ரஜினி சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வருகிறார். இன்றும் கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு ஸ்லோ மோஷன் வாக்கிங்கில் வந்து திரையரங்கை அலர விடுகிறார்.

ரஜினி அரசியல் எழுச்சி :

ஆனால் விஜய் ஜனநாயகன் படத்துடன் சினிமா வாழ்க்கைக்கு goodbye சொல்லிவிட்டு அரசியலில் களம் இறங்கி உள்ளார். 1996-ல் ரஜினிக்கு ஒரு எழுச்சி இருந்தது. ஆனால் அப்பொழுது அவர் அரசியலுக்கு வர விரும்பவில்லை. நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் ’தமிழ்நாட்டில் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதை நிரப்புவதற்காக நான் வருகிறேன்’ என்று கூறினார். நான் அரசியலுக்கு வந்தேன் என்றால் தனி கட்சி தனி கொடி தான் என்று கூறினார்.

#image_title

ரஜினி தமிழக அரசியலில் ஒரு கலக்கம் உண்டு பண்ண வருகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அப்படியே ஒதுங்கி விட்டார். இந்நிலையில் விஜய் தனது 50 வது வயதில் தமிழக வெற்றி கழகம் வென்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் இறங்கிவிட்டார். ரஜினி அரசியல் காரணங்களால் பல அவஸ்தைகளை அப்பொழுது சந்தித்தார் என்றும் அதை விஜய் இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்றும் பிரபல சினிமா விமர்சகர் டாக்டர் காந்தராஜ் கூறியுள்ளார்.

ரஜினி பட்ட அவஸ்தை :

மேலும் அதில்,” ரஜினி அந்த காலத்தில் என்னென்ன அவஸ்தைப்பட்டாரோ அதே அவஸ்தை தான் விஜய்யும் பட்டுக் கொண்டிருக்கிறார். அதாவது ரஜினி ஏன் அரசியலுக்கு வரவில்லை என்ற காரணத்தை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். அது தெரியாமல் கட்சி ஆரம்பித்து வசமாக மாட்டிக் கொண்டார் விஜய். ரஜினி கட்சி ஆரம்பித்து அனைத்து வேலைகளையும் மும்முறமாக செயல்படுத்தினார். அதன் பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லை கொரோனா போன்ற காரணங்களால் அவர் அரசியலில் இருந்து விலகினார்”.

சிக்கிய விஜய் :

”அதன் பிறகு பாஜகவால் அவரை தொந்தரவு செய்ய முடியவில்லை. ரஜினி செத்தாலும் பரவாயில்லை பாஜக வெற்றி பெற வேண்டுமா? என்று கேட்க ஆரம்பித்தார்கள். அதோடு பாஜக தெரித்து ஓடி விட்டது. ரஜினி வரவில்லை என்று ஒதுங்கி விட்டார் அமித்ஷா. அதன் பிறகு அடுத்த ஆள் யார் என தேடிக் கொண்டிருக்கையில் விஜய் வசமாக சிக்கிக்கொண்டார் . அது மட்டுமில்லாமல் விஜய்க்கு ஓய் பிரிவு பாதுகாப்பு என்று அவரை சுற்றி உளவு துறையை நியமித்து விட்டார்”.

”விஜய் ரெஸ்ட் ரூம் போக வேண்டும் என்றால் கூட அமித் ஷாக்கு தெரியாமல் போக முடியாது. பாஜக தேர்தலை நின்றால் ஒரு ஓட்டு கூட விழாது அது அவர்களுக்கு நன்றாக தெரியும். அதனால் அவர்கள் இப்படி சுற்றி சுற்றி அடிக்கிறார்கள். விஜய் இதிலிருந்து எப்படி மீண்டு வருவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்”. என்று கூறியுள்ளார்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.