மருத்துவமனை ஊழியராக இருந்துட்டு இப்படியா பண்ணனும்?….. அழுது புலம்பும் சிறுமி….. காவல்துறையினர் கைது நடவடிக்கை…..!!!!
SeithiSolai Tamil September 18, 2025 06:48 AM

கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலை கீழப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் தான் நடராஜன். இவர் தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராகவும் மற்றும் காயமடைந்தவர்களுக்கு அவர்களின் வீட்டிற்குச் சென்று கட்டு கட்டும் பணியையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நடராஜன் 17 வயது சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அச்சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடராஜனை அதிரடியாக கைது செய்தனர். மேலும் கைதான நடராஜன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இவ்வாறு மருத்துவமனை ஊழியர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.