தவாக நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொலை! ஓசூரில் பரபரப்பு
Top Tamil News September 18, 2025 08:48 AM

ஓசூர் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒன்றிய நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த சொங்கோடசிங்கனள்ளி கிராமத்தை சேர்ந்த ரவிசங்கர்(35) என்பவர் பன்றிகளை வளர்க்கும் தொழிலை மேற்க்கொண்டு வருகிறார். மேலும், ரவிசங்கர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய பொருளாளராக பொறுப்பில் உள்ள நிலையில், அஞ்சாளம் கிராமத்தில் ரவிசங்கரை மர்மநபர்கள் இருவர் ஓட ஓட விரட்டி அரிவாளால் கை, முதுகு, தலை பகுதியில் வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் ரவிசங்கர் சரிந்து விழுந்துள்ளார் .

இந்த நிலையில் ரவிசங்கரை அப்பகுதியினர் மீட்டு இராயக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வாகனம்  மூலம் அனுப்பி வைத்தனர், ஆனால் மருத்துவமனைக்கு செல்வதற்குள் ரவிசங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். சூளகிரி போலிசார்  விசாரணை நடத்தி வரும்நிலையில், ரவிசங்கர் தொழிற்போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.. கொலையாளிகள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.