பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். அத்தகைய விஷப்பாம்பு, ஒரு சிறுமியின் படுக்கையில் நகர்ந்து செல்ல, பெற்றோர் அதை அகற்றாமல் வீடியோ எடுத்தனர் என்ற தகவல் இணையத்தில் பரபரப்பாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அந்த சிறுமியின் பெற்றோரை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
View this post on Instagram
A post shared by Ariana (@snakemasterexotics)
வீடியோவில், ஒரு கருப்பு நிற பாம்பு மெதுவாக படுக்கையில் நகர்கிறது. அதிசயம் என்னவென்றால், அந்த சிறுமி அந்த பாம்பின் வாலைக் கட்டிப்பிடித்து தன்னோடு படுக்க வைத்திருக்கிறார். இதற்கிடையில், சிறுமியின் முகத்தில் சிறிதும் பயம் இல்லை என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. “இது குழந்தையின் உயிரை ஆபத்துக்கு ஆளாக்கும் முடிவா?” என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனால் உண்மை சற்று வித்தியாசமானது. இந்த வீடியோ, @snakemasterexotics என்ற Instagram பக்கத்தில் இருந்து செப்டம்பர் 6ஆம் தேதி பகிரப்பட்டுள்ளது. அந்த கணக்கின் விவரங்களைப் பார்க்கும்போது, இது ஒரு பாம்புகள் மற்றும் ரேப்டைல்ஸ் பற்றிய கலெக்ஷன் வைக்கும் குடும்பம் என்பதும், அந்த சிறுமிக்கு இவை எல்லாம் சிறுவயதிலிருந்தே பழக்கப்பட்டவை என்பதும் தெரிய வருகிறது. இவர்கள் ஒரு ரேப்டைல் மியூசியமும் நடத்தி வருகின்றனர்.