திருப்பூர் மாவட்டத்தில் தனக்கு யாருமே இல்லை எனக் கூறி கணவனால் கைவிடப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அந்த இளைஞரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் என்ற பிரதீப். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. கணவனால் கைவிடப்பட்ட அந்தப் பெண் தனது மகனுடன் வசித்து வந்த நிலையில் பிரதீப் அந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் அந்தப் பெண்ணிடம் தனக்கு யாருமே இல்லை தான் ஒரு அனாதை எனவும் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் கர்ப்பமாக இருந்த அந்த பெண் பிரதீப்புக்கு தாயார் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் பிரதீப் தாயாரிடம் சென்று தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார். அதற்கு பிரதீப் தாயார் மறுத்துவிட்ட நிலையில் பிரதீப்பும் கர்ப்பமான பெண்ணை கைவிட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞர் தன்னை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றியதாக அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதையும் படிங்க: "மாமியார் வீட்டில் உல்லாசம்..." மகள், காதலனை தீர்த்து கட்டிய தந்தை.!!
இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பிரதீப் என்ற பிரவீனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இளம் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: திருச்சியில் அதிர்ச்சி... சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம்.!! பிசியோதெரபிஸ்ட் கைது.!!