குட் நியூஸ்..! PF சந்தாதாரர்களுக்கு தீபாவளிக்கு முன்பு தித்திப்பான அறிவிப்பு வர வாய்ப்பு..!
Top Tamil News September 18, 2025 04:48 PM

இ.பி.எஃப்.ஓ (Employees’ Provident Fund Organisation - EPFO) அதன் சந்தாதாரர்களுக்குப் பி.எஃப். கணக்கை கொண்டு வங்கிசேவை போன்ற வசதிகளை அறிமுகப்படுத்த ஆலோசித்து வருகிறது. குறிப்பாக, பி.எஃப் தொகையை ஏ.டி.எம்.கள் மூலம் எடுக்கும் வசதியோ அல்லது யு.பி.ஐ. வழியாக பயன்படுத்தும் வசதியோ வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளிவருகின்றன.
இது குறித்து அடுத்த மாதம் 10 அல்லது 11ம் தேதி நடைபெற உள்ள இ.பி.எஃப்.ஓ. அமைப்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த புதிய வசதிகள் வழங்குவது இக்கூட்டத்தில் உறுதிசெய்யப்பட்டால், சுமார் 8 கோடி சந்தாதாரர்கள் தங்கள் பணத்தைப் பயன்படுத்துவது மிக எளிமை ஆகும்.