2026-க்கான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வியூகம் தெரியாமல் எதிரிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் உரையாற்றிய செந்தில் பாலாஜி, “2026ல் தி.மு.கழகத்தின் வெற்றிக் கணக்கை இங்கிருந்தே தொடங்குவோம். எதிரி யாராக இருந்தாலும், எந்த வடிவில் வந்தாலும், எத்தனை பேராக வந்தாலும் நாமதான் ஜெயிக்கறோம், நம்ம மட்டும்தான் ஜெயிக்கறோம். 2026-க்கான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வியூகம் தெரியாமல் எதிரிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்” என்றார்.