ராஜஸ்தான் மாநிலம் நஹர்கர் நகரில் அமைந்துள்ள ஒரு கடைக்கு வந்த நபர் அங்கிருக்கும் பெண்ணிடம் ஏதோ ஒரு பொருள் வேண்டும் என்று கேட்கிறார். இதையடுத்து அந்தப் பெண் அந்தப் பொருளை எடுக்க செல்கிறார். அப்போது இந்த நபர் அந்த பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தவாறு டிராயரை திறந்து அதில் இருந்த பணத்தை எடுக்க முயற்சி செய்கிறார்.
அப்போது அந்தப் பெண் மீண்டும், மீண்டும் எது வேண்டுமென்று கேட்க அப்பெண்ணை திசை திருப்பிவிட்டு டிராயரை திறந்து அதிலிருந்த பணத்தை எடுத்து தனது பேண்ட் பையில் வைக்கிறார். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து கொள்கின்றனர்.