கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்றத் தாழ்வுடன் இருந்து வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 18) தங்கத்தின் விலையில் குறைவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.50 குறைந்து ரூ.10,220க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.81,760 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று (செப்டம்பர் 17) தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்திருந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.400 குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலையில் ஏற்பட்ட இந்த குறைவு, நுகர்வோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தங்கம் வாங்குவதற்கான சிறந்த வாய்ப்பாக வணிகர்கள் கருதுகின்றனர்.