அமித்ஷாவை சந்தித்த பிறகு முகத்தை மூடிக்கொண்டு வருவதற்கு என்ன அவசியம்? டிடிவி.தினகரன்
Webdunia Tamil September 18, 2025 07:48 PM

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின்னர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்தது ஏன் என்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அதிமுக கூட்டணியில் நடந்து வரும் உட்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விவகாரம் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவாதிக்கவே எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி, தனது முகத்தை மறைத்தபடி வந்ததாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து விமர்சித்த டி.டி.வி. தினகரன், "மத்திய உள்துறை அமைச்சரைச்சந்தித்துவிட்டு வரும்போது யாராவது முகத்தை மூடுவார்களா? அவர் ஏன் அப்படிச் செய்தார் என்பதை அவர்தான் விளக்க வேண்டும்," என்று கூறினார்.

மேலும், "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இது அழகா?" என்றும் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பினார். இந்த பேச்சு, அரசியல் வட்டாரங்களில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.