கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள தேவாலயத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் கொல்லத்திலுள்ள சங்கர் மருத்துவமனைக்கு அருகே பிரபலமான கிறிஸ்தவ மடம் அமைந்துள்ளது. இந்த மடத்திலுள்ள தேவாலயத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கன்னியாஸ்திரியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட கன்னியாஸ்திரி மதுரையைச் சேர்ந்த மேரி ஸ்கலாஷ்டிகா(33) என தெரிய வந்திருக்கிறது. இவர் கடந்த 3 வருடங்களாக தேவாலயத்தில் சேவையாற்றி வந்திருக்கிறார். மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக கன்னியாஸ்திரி கடிதம் ஒன்றும் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் தனது தற்கொலைக்கான காரணத்தையும் அவர் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
இதையும் படிங்க: துயரத்தில் முடிந்த சந்திப்பு... காதலியை கொன்று தற்கொலை செய்த காதலன்.!!
மேலும் கடந்த சில மாதங்களாகவே அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மன அழுத்தத்தின் காரணமாக கன்னியாஸ்திரி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக செய்திகள் அறிவிக்கின்றன. தேவாலயத்தில் கன்னியாஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: தலை எங்கே...? தோப்பில் கிடந்த சடலம்.!! காவல் துறை தீவிர விசாரணை.!!