வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் (வயது 31), ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு, முகநூல் (Facebook) மூலம், வேலூர் அருகே உள்ள பென்னாத்தூர் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண்ணுடன் வீரக்குமாருக்கு அறிமுகம் ஏற்பட்டது.
இறுதியில், இருவரும் காதலாகி, மொபைல் வழியாகவும், விடுமுறையில்போது நேரில் சந்திப்பதுமாக காதலை வளர்த்தனர். அப்போது , திருமணம் செய்து கொள்வேன் என வாக்குறுதி அளித்து, தனிமையாக இருக்கும் நேரங்களில் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
அதோடு, அந்த இளம்பெண்ணிடமிருந்து மொத்தம் ரூ.35 லட்சம் வரை பெற்றுள்ளார். ஆனால், அதன்பின், திருமணம் குறித்து தொடர்ந்த வாக்குறுதியை தவிர்த்து, தொடர்பைத் துண்டித்துள்ளார். இதுப்பற்றி இளம்பெண் கேட்டபோது , வீரக்குமாரும், அவரது குடும்பத்தினரும் மிரட்டல் விடுத்தனர்.
இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் வீரக்குமார், அவரது தம்பி கவிக்குமார் (வயது 29) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மொத்தம் நான்கு பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தற்போது, விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த வீரக்குமார் மற்றும் அவரது தம்பி காவல்துறையால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.