காசாவில் போர் பதற்றம்: இஸ்ரேலின் தரைப்படை தாக்குதல்!
Webdunia Tamil September 19, 2025 01:48 AM

காசாவில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் தனது தரைப்படை தாக்குதலை தொடங்கியுள்ளது. இஸ்ரேலிய படைகள் காசா நகரத்திற்குள் முன்னேறி வருவதால், அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இஸ்ரேலின் ராணுவம் காசாவிற்குள் நுழைந்துள்ளதால், அப்பகுதி முழுவதும் புகைமூட்டத்துடன் காணப்படுகிறது. இஸ்ரேலின் கூற்றுப்படி, இன்னும் சுமார் 3,000 ஹமாஸ் போராளிகள் காசாவில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தத் தரைப்படை தாக்குதலால், காசாவில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி, தெற்கு நோக்கி பாதுகாப்பான இடங்களை தேடி இடம்பெயர்ந்து வருகின்றனர். போர் காரணமாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த போரை உடனே நிறுத்தும்படி உலக நாடுகள் வலியுறுத்தியும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.