நாம கோடு போட சொன்னால் ரோடு போடுவார் - செந்தில் பாலாஜியை புகழ்ந்த மு.க.ஸ்டாலின்..!
Top Tamil News September 19, 2025 03:48 AM

திமுக முப்பெரும் விழா கரூர் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.

இவ்விழாவில் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, 

பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் நின்று உண்மையாக உழைக்கிறோம். தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமையும். நாட்டிலேயே முதலில் ஆட்சியை பிடித்த மாநில கட்சி திமுக. மிரட்டலுக்கு பயப்படும் கட்சி திமுக அல்ல. ஈராயிரம் ஆண்டுகளாக காவி கூட்டத்துடம் போராடி வருகிறோம். திமுகவுக்கு மாற்று, மாற்றம் என்றவர்கள் எல்லாம் மறைந்து போனார்கள். திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது

மேற்கு மண்டலத்தில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளார் செந்தில் பாலாஜி.

பொதுக்கூட்டம் என்று சொல்லிவிட்டு மாபெரும் எழுச்சி மாநாட்டை ஏற்பாடு செய்து இருக்கிறார் செந்தில் பாலாஜி. நாம கோடு போட சொன்னால் ரோடு போடுவார். ரோடு போட்டு அந்த ரோடு மேலதான் நான் வாகனத்தில் வந்தேன். மேற்கு மண்டலத்தில் எதிரிகளுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாக இருக்க கூடியவர்தான் செந்தில் பாலாஜி. அதனால்தான் செந்தில் பாலாஜி வெளியில் இருந்தால் தங்களால் நிம்மதியாக தூங்க முடியாது என்று அவரை முடக்கபார்த்தார்கள். ஆனால் அவரை முடக்க முடியுமா? எடுத்த பணியை வெற்றிகரமாகமுடித்துக்காட்டுவார். நான் உறுதியாக சொல்கிறேன். கழக வரலாற்றில் இப்படியெரு பிரமண்டமான முப்பெரும் விழா நடைபெற்று இருக்காது” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.