பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் படி, ஒரு நாட்டின் மீது மேற்கொள்ளப்படும் எந்தவொரு தாக்குதலும், மற்றொரு நாட்டின் மீதான தாக்குதலாகவே கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் நேட்டோ (NATO) பாதுகாப்பு ஒப்பந்தம் போன்று அமைந்துள்ள இந்த ஒப்பந்தம், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, கத்தாரில் உள்ள வரமாஸ் அலுவலகங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் நடத்திய தாக்குதல் காரணமாகவே, சவுதி அரேபியா இந்த புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
அண்மையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இரு தரப்பும் ராணுவ ரீதியான மோதலுக்கு சென்ற நிலை, சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இனி பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியால், அதன் பதிலுக்கு இந்தியா மீது சவுதி அரேபியா தாக்குதல் நடத்தும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த பாதுகாப்பு ஒப்பந்தம், ஆசியாவிலேயே மட்டுமல்லாது உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலையிலும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.