kpy பாலாவுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததே நான் தான்.. மாஸ்டர் பிளானை உடைத்த அமுதவாணன்..
CineReporters Tamil September 19, 2025 06:48 AM
kpy பாலா :

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானார். தனது அசாத்திய பஞ்ச் கவுண்டர்களால் காமெடி செய்து ரசிகர்களை வயிரு குலுங்க சிரிக்க வைப்பார். பாலாவின் இந்த திறமையை கண்டறிந்த விஜய் டிவி தொடர்ந்து அனைத்து ரியாலிட்டி ஷோக்களிலும் வாய்ப்பு கொடுத்தது.

ஒரு கட்டத்தில் பாலா இல்லாத reality show விஜய் டிவியில் பார்க்க முடியாது. அதன் பின் தனது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை அனைத்தும் பயன்படுத்த தொடங்கினார் பாலா. அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மக்களுக்காக சேவை செய்து வந்தார்.

மக்கள் சேவையில் பாலா :

வசதி இல்லாத ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது, வயதில் பெரியோர்களுக்கு உதவுவது, மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக்கு உதவுவது. மலைவாழ் பகுதி மக்களுக்காக ambulance வாங்கிக் கொடுப்பது. என பல நலத்திட்ட உதவிகளை தனி ஒரு அரசாங்கமாய் நின்று உதவிகளை செய்து வந்தார்.

அதன் பிறகு இவருக்கு வெள்ளித்திரையில் அறிமுகம் கிடைத்தது. இயக்குனர் செரிப் இயக்கத்தில் ’காந்தி கண்ணாடி’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்தில் sentiment emotional drama கதையில் நடித்து மக்களின் ஆழ் மனதில் தடம் பதித்து விட்டார். இந்தப் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் மக்களுக்காக நான் செய்யும் இந்த சேவைகளை உதவி என்று சொல்ல மாட்டேன். என்னுடைய கடமை என்று தான் சொல்லுவேன்.

கேப்டன் வழியில் பயணிக்க விரும்புகிறேன். என்று கூறி தமிழக மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இவரைப் பற்றிய மேலும் சில உண்மைகளை கூறியிருக்கிறார் விஜய் டிவி புகழ் அமுதவாணன்
அதில்,”பாலா என்னிடம் முதல் நாள் எப்படி மரியாதையாக பணிவோடு வந்து என்னிடம் சேர்ந்தானோ அதே பாலாவாக தான் இன்னும் இருக்கிறான். இன்று அவன் பெரிய celebrity ஆக இருந்தாலும் அன்று என்னிடம் எப்படி நடந்து கொண்டானோ அதே பாலாவைத்தான் இன்றும் பார்க்கிறேன்”.

நான்தான் வழிகாட்டி :

”என்னுடைய குடும்பத்தில் ஒருத்தவனாகவே மாறிவிட்டான். இளையராஜாவே பாராட்டும் அளவிற்கு உயர்ந்திருக்கிறான். இதைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பாலாவுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. ஏனென்றால் அவன் வறுமையில் இருந்து வந்தவன். இன்று சம்பாதிக்கும் காசு அனைத்தையும் மக்களுக்காக செலவழிக்கிறான் என்றால் சிறுவயதில் அவன் பட்ட கஷ்டங்கள் பல”.

”பாலா மற்றவர்களுக்கு உதவி செய்ய முக்கிய காரணம் அவனுடைய தாய் தந்தை தான். அவர்கள் பாலாவிற்கு ரொம்ப support ஆக இருந்து வருகிறார்கள். இன்று இளையராஜாவின் அவனைப் பார்த்து impress ஆகி இருக்கிறார். பாலா தொடர்ந்து நல்லது செய்து கொண்டு தான் இருப்பான். இது விளம்பரமும் அல்லது யாருடைய பணமோ கிடையாது. அவனுடைய சொந்த உழைப்பு மற்றும் அவன் முழு மனதாக அனைவருக்கும் உதவி செய்து வருகிறான்”. என்று கூறியுள்ளார்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.