ஓவ்வொரு வருடமும் வெள்ளிக்கிழமை தியேட்டரில் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. ஆனால், அந்த எல்லா படங்களுமே வெற்றிப்படங்களாக அமைவது இல்லை. போன வாரம் அதாவது செப்டம்பர் பாம், பிளாக் மெயில், குமார சம்பவம், தணல், காயல், அந்த 7 நாட்கள் உள்ளிட்ட 10 திரைப்படங்கள் வெளியானது. இதில் எந்த படமும் ஹிட் அடிக்கவில்லை.
இந்நிலையில்தான் செப்டம்பர் 19ஆம் தேதி ஆன நாளை வெள்ளிக்கிழமை 5 திரைப்படங்கள் வெளியாகிறது. அவை என்னென்ன படங்கள் யார் யாரெல்லாம் நடிகர்கள் என்பது பற்றி பார்ப்போம்.:
நாளை வெளியாகும் 5 திரைப்படங்களில் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது விஜய் ஆண்டனி நடித்துள்ள சக்தி திருமகன். இந்த படத்தின் டிரைலர் வீடியோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை அருவி, வாழ் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கியுள்ளார்.
கவினின் ரொமாண்டிக் காமெடி கிஸ்:அடுத்து நடிகர் கவின் நடித்துள்ள கிஸ் திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். சில திரைப்படங்களில் நடித்த மற்றும் நடன இயக்குனருமான சதீஷ் கிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ரொமான்டிக் காமெடி படமாக கிஸ் திரைப்படம் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் டிரெய்லரும் வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது. கவினுக்கு பிளடி பெக்கர் படம் தோல்வி அடைந்த நிலையில் KISS படம் கை கொடுக்குமா என்பதை பார்க்க வேண்டும்.
அடுத்து, பா.ரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியுள்ள தண்டகாரண்யம் திரைப்படம் நாளை வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே உலகப் போரில் கடைசி குண்டு என்கிற படத்தை இயக்கியவர். இந்த படத்தில் கெத்து தினேஷ், கலையரசன், ரித்விகா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் ப்ரீமியர் ஷோவை பார்த்த சினிமா செய்தியாளர்கள் இது ஒரு சிறந்த படம் என பாராட்டி வருகிறார்கள்.
அடுத்து திரள் என்கிற திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த படத்தை மனோஜ் கார்த்திக் இயக்கி உள்ளார். ரவி பிரகாஷ், யுவன், மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். அதேபோல் இயக்குனர் கௌதமன் இயக்கி நடித்துள்ள படையாண்ட மாவீரன் படமும் நாளை வெளியாகவுள்ளது. அனேகமாக இந்த ஐந்து படங்களில் தண்டகாருண்யம், சக்தி திருமகன், கிஸ் ஆகிய மூன்று படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என கணிக்கப்படுகிறது.