தமிழ் சினிமாவில் எழுபது, எண்பதுகளில் பிசியான இசையமைப்பாளராக இருந்த இரட்டையர்கள் சங்கர் கணேஷ்.
'பருத்தி எடுக்கயில', 'பட்டு வண்ண ரோசாவாம்', 'ஒரே ஜீவன்', 'பட்டுக் கோட்ட அம்மாலு', கொண்ட சேவல் கூவும் நேரம்' என எண்ணற்ற எவர்கிரீன் பாடல்களைத் தந்தவர்கள் இவர்கள்.
அறுபதுகளில் ஆரம்பித்து எம்.ஜி.ஆர்., சிவாஜி ரஜினி, கமல் எனப் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் முதலில் சங்கர் காலமானார்.
அதன் பிறகு தன் நண்பரின் பெயரும் தன்னுடனேயே இருக்கட்டுமென விரும்பிய கணேஷ், தன்னை சங்கர் கணேஷ் என்றே அடையாளப்படுத்தத் தொடங்கினார்.
கழுத்து நிறைய நகைகள் கையில் கிளவுஸ் இவைதான் சங்கர் கணேஷின் அடையாளம்.
வயதாகி விட்டதால் எப்போதாவது மேடையேறிப் பாடுவதுடன், அவ்வப்போது சில பக்தி ஆல்பங்களை உருவாக்கி வந்தார்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இதயத்தில் பிரச்னை வந்ததால் 'பாட வேண்டாம்' என மருத்துவர்கள் ஆலோசனைகள் தந்திருந்தார்களாம்.
எனவே வீட்டில் ஓய்வெடுத்து வந்தவருக்கு நேற்று முன் மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது.
உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலில் அட்மிட் செய்திருக்கிறார்கள்.
பிறகு குடும்ப மருத்துவரின் யோசனை படி அங்கிருந்து போரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று அட்மிட் செய்திருக்கிறார்கள்.
சங்கர் கணேஷின் மகனும் நடிகருமான ஸ்ரீகுமாரைத் தொடர்பு கொண்டு இது தொடர்பாகக் கேட்ட போது,
"இப்ப உடல்நிலை பரவால்ல. ஆனா தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் இருக்கிறார். அப்பா குணமாக அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்யணும்னு இந்த நேரத்துல கேட்டுக்க ஆசைப்படுறேன்" என்றார்.
Delhi Ganesh : `விமானப்படை டு கே. பாலசந்தர் பட்டறை' - டெல்லி கணேஷ் பற்றிய தகவல்கள் இங்கே!சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR