பிரபல தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். பெண் வேடம் போட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்தவர்.
இவருக்கு திருமணம் ஆகி மரியா என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தத் தம்பதியினருக்கு பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இந்த நிலையில், சமீபத்தில் நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதில்," நானும், நாஞ்சில் விஜயனும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தோம். தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறிவிட்டு பாலியல் ரீதியாகவும் பயன்படுத்திக் கொண்டார். அவருக்கு திருமணம் ஆன பிறகும் என்னுடன் பழகிக்கொண்டு தான் இருந்தார். இப்போது என்னை திருநங்கை என்ற காரணத்தை காட்டி திருமணம் செய்ய மறுக்கிறார்" என்றுத் தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நடிகர் நாஞ்சில் விஜயன் மீது, புகார் கொடுத்திருந்த திருநங்கை, அந்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.
நடவடிக்கை தேவையில்லை, சமாதானமாக செல்வதாக கூறி எழுத்துப்பூர்வமாக வழக்கை வாபஸ் வாங்கியுள்ளார். இதற்கான நகலை, நாஞ்சில் விஜயன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.