தமிழ்நாட்டில் இனி பனை மரங்களை வெட்டுவதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கடிதம் கட்டாயம் பெற வேண்டும் என்று தமிழக அரசு சற்று முன் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பனை மரத்தை வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்கு பயன்படுத்துவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பனை மரங்களை வெட்டுவதற்கு முன்பாக உழவர் என்ற செயலியில் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். அதேபோன்று வெட்டப்பட்ட பனை மரங்களை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லவும் அனுமதி கட்டாயம் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.