தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை கடந்த சனிக்கிழமை திருச்சியில் தொடங்கினார். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால், திட்டமிட்ட நேரத்தில் விஜயால் பரப்புரை மேற்கொள்ள இயலவில்லை.
பெரம்பலூரில் நடத்த இருந்த மக்கள் சந்திப்பையும் நேரமின்மை காரணமாக விஜய் ரத்து செய்தார்.
அதன் தொடர்ச்சியாக, வரும் சனிக்கிழமை நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்கிறார். இது தொடர்பாக சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் இரு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்ட விஜய், தொண்டர்களின் கூட்டத்தை கையாள்வது, உரிய நேரத்தில் பரப்புரை இடத்திற்கு சென்று சேர்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் ஆலோசனை நடத்தினார்.