STR49: வெற்றிமாறன் சிறந்த இயக்குனராக பார்க்கப்பட்டாலும் முழு கதையையும் எழுதிவிட்டு ஷூட்டிங்கிற்கு செல்லும் பழக்கம் அவருக்கு இல்லை. அதனால்தான் விடுதலை முதல் மற்றும் அதன் 2ம் பாகம் இரண்டையும் சேர்த்து 3 வருடங்கள் எடுத்தார்.
அதனால்தான் சூர்யாவை வைத்து இதுவரை அவர் வாடிவாசல் திரைப்படத்தையும் இயக்கவில்லை. அதாவது வாடிவாசல் படத்திற்கான முழு கதையையும் வெற்றி மாறன் எழுதி முடிக்கவில்லை. ‘முழு கதையையும் சொல்லுங்கள்.. கால்ஷீட் கொடுக்கிறேன்’ என சொல்லிவிட்டார் சூர்யா. அதனால்தான் அந்த படம் இப்போதுவரை துவங்கப்படவில்லை.
எனவேதான் சிம்புவை வைத்து வடசென்னை தொடர்பான ஒரு கதையை சொல்லி வேலையை தொடங்கினார் வெற்றிமாறன். இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார். சிம்வை வைத்து சில நாட்கள் புரமோ வீடியோவெல்லாம் எடுத்தார் வெற்றி மாறன். ஆனால் தற்போது அது முடங்கிக் கிடக்கிறது.
இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டால் ‘இன்னும் ஒரு வாரத்தில் சொல்கிறேன்.. இன்னும் 10 நாட்களில் சொல்கிறேன்’ என எஸ்கேப் ஆகி வருகிறார் வெற்றிமாறன். STR49 படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்கும் என்பது யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில்தான் இந்த படம் தொடர்பான சில முக்கிய தகவல்கள் வெளியே கசிந்திருக்கிறது. இந்த படத்திற்காக செட் அமைக்கும் பணி துவங்கியபோது அதற்கான செலவு மட்டுமே 20 கோடி வரை சென்றிருக்கிறது. இதனால் பதறிய தாணு வேலையை நிறுத்த சொல்லி இருக்கிறார். ஏனெனில் சிம்புவுக்கு சம்பளம் 40 கோடி, வெற்றிமாறனுக்கு 20 கோடி, படத்தின் செலவு 50 கோடி என கணக்கிட்டால் இதுவே 110 கோடி வருகிறது. மற்ற செலவுகளை கணக்கிட்டால் படத்தின் மொத்த பட்ஜெட் 140 கோடியை தொடுகிறதாம்.
சிம்புவுக்கு இருக்கும் வியாபாரத்தை கணக்குப் போட்ட தாணு பட்ஜெட்டை குறையுங்கள் என சொல்லி பட வேலைகளை நிறுத்தி வைத்திருக்கிறார். சமீபத்தில் வெற்றி மாறனை தொடர்பு கொண்ட சிம்பு ‘செட்டுக்குத்தானே அதிக செலவாகிறது. பேசாமல் லைவ் லொகேஷனுக்கு சென்று சூட் பண்ணுவோம்’ என சொல்லி இருக்கிறார்.
வெற்றி மாறனும் இதை ஏற்று அதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார். ஆனால் அது சாத்தியம் இல்லை எனக்கு தெரிய வந்திருக்கிறது. செட்டில்தான் எடுக்க வேண்டிய நிலை. எனவே என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.