நடிகர் ரோபோ சங்கர் மறைவு - தவெக தலைவர் விஜய் இரங்கல்.!!
Seithipunal Tamil September 20, 2025 12:48 PM

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நேரிலும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

நண்பர் ரோபோ சங்கர் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர்.

நண்பர் ரோபோ சங்கர் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்றுத் தெரிவித்துள்ளார். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.