புரட்டாசி சனிக்கிழமை... நவ திருப்பதி கோயில்களில் குவிந்த பக்தர்கள்... சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு!
Dinamaalai September 20, 2025 01:48 PM

இன்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதலே நவதிருப்பதி கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று முதல் பக்தர்களின் வசதிக்காக புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் (செப்.20, 27, அக்.4, 11)  நெல்லையில் இருந்து நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் நவதிருப்பதி திருக்கோயில்களுக்கு பக்தா்கள் சென்று, வர சிறப்பு சேவை பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சிறப்புப் பேருந்துகள், புரட்டாசி சனிக்கிழமைகளில் காலை 6 மணிக்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு நவதிருப்பதி திருத்தலங்களான ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, தென் திருப்பேரை, திருக்கோளூா், ஆழ்வாா்திருநகரி ஆகிய இடங்களுக்கு சென்று இரவில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வந்து சேரும்.

பயணக் கட்டணம் நபருக்கு ரூ.500 வசூலிக்கப்படும். புதிய பேருந்து நிலையத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டணத் தொகையை முழுமையாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், அரசு போக்குவரத்துக் கழக இணையதளம் www.arasubus.tn.gov.in/ மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதேபோல், புரட்டாசி சனிக்கிழமைகளில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து திருவேங்கடநாதபுரம், கருங்குளம், எட்டெழுத்து பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளுக்கு தனித்தனியாகவும், வள்ளியூா்-திருக்குறுங்குடி, வீரவநல்லூா்- அத்தாளநல்லூா் இடையேயும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு 79049 06730, 99944 62713 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.