ராமநாதபுரம் முதுகுளத்தூரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகிறார்கள்.
அப்படிப்பட்ட இடத்திலேயே இன்று எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது.அங்கு திடீரென காட்டுப்பன்றி ஒன்று மருத்துவமனைக்குள் புகுந்தது. நேராக பிரசவ வார்டுக்குள் நுழைந்த பன்றி, அங்கும் இங்கும் ஓடி, மருத்துவ ஊழியர்கள் மற்றும் நோயாளிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், கண்ணிமைக்கும் நேரத்தில் வார்டில் இருந்தவர்கள் பயந்து கத்தி ஓடினர்.இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்களும், பன்றி பிடிப்பவர்களும் இணைந்து அந்த காட்டுப்பன்றியை வெற்றிகரமாக கட்டுப்படுத்தினர்.
அதன் பிறகு, பிடிக்கப்பட்ட பன்றி வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு மருத்துவமனைக்குள் புகுந்த காட்டுப்பன்றியின் ‘அட்டகாசம்’ காரணமாக, அங்கு சில மணி நேரங்கள் கலவரம் நிலை நிலவியது.