அதிமுக உரிமை மீட்பு குழு புதுவை மாநில செயலாளர் திரு.ஓம்சக்தி சேகர் அவர்கள் புதுவை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அவர்களை நேரில் சந்தித்து அளித்துள்ள கோரிக்கை மனு அளித்தார்.
புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தரம் மிகவும் மாசுபட்டு எந்தவித பயன்பாட்டுக்கும் உபயோகமில்லாமல் இருப்பதையும், கடந்த மழையின் போது நெல்லித்தோப்பு தொகுதியில் மிகுந்த பாதிப்புகளை சந்தித்த பகுதிகளை சுட்டிக்காட்டி உடனடியாக வாய்க்கால்களை தூர்வாரி மற்றும் ஆழப்படுத்தும் நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என்று அவ்வபோது நான் தங்களுக்கு கடிதம் மூலமாக வலியுறுத்தி வருகின்றேன். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17-09-2025 அன்று மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை எனது தலைமையில் பொதுமக்களுடன் சாரம் பாலம் பகுதியில் நடத்தினேன்.
மேற்கண்ட ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி கீழ்கண்ட முக்கியமான பொதுப்பணித்துறை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை போர்கால அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ள தங்களை கேட்டுக்கொள்கிறேன்.
முக்கிய கோரிக்கைகள்:1)சாரம் பாலம் முதல் வேல்முருகன் நகர் வரை உள்ள வாய்க்கால் ஆழப்படுத்தி தூர்வாரப்பட வேண்டும்
2) மாசுபட்ட குடிநீரால் பாதிக்கப்பட்டுள்ள சக்தி நகர் பகுதியில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை விரைவு படுத்த வேண்டும்.
3) சக்தி நகர் பகுதியில் புதிதாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட வேண்டும்.
4) சக்தி நகர் 8 ஆவது தெருவில் உள்ள வாய்க்கால் முறையாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
5) அரசின் சார்பில் வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சக்தி நகர் பகுதி மக்களுக்கு அவரவர் வீடுகளுக்கு எடுத்துவந்து கொடுக்கப்பட வேண்டும்.
6) ராஜீவ் காந்தி மருத்துவமனை எதிரே உள்ள வாய்க்கால் திருப்பிவிடப்பட்டு இந்திராகாந்தி சிலை அருகே உள்ள பெரிய வாய்க்காலில் இணைக்கப்பட வேண்டும்.
7) நெல்லித்தோப்பு கஸ்தூரிபாய் நகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி புதிதாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
8) நெல்லித்தோப்பு தொகுதி முழுவதும் உப்பு கலந்த நீர் அதிகம் வருவதால் அதனை உரிய பரிசோதனை செய்து தேவையான இடங்களில் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட வேண்டும்.
9) அவ்வை திடல் அருகே மழை நீர் வெளியேற அமைக்கப்பட்ட பழைய குழாய் மாற்றி அமைக்கப்பட்டு புதிதாக குழாய் அமைக்கப்பட வேண்டும்.
10) சத்யா நகர் மெயின் ரோட்டில் உள்ள வாய்க்கால் புனரமைக்கப்பட்டு சைடு கட்டைகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
11) திருவள்ளுவர் சாலை வாய்க்கால் உடனடியாக தூர்வாரப்பட்டு சாலை அமைக்கப்பட வேண்டும்.
12) லெனின் வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட வாய்க்கால் தூர்வாரப்பட வேண்டும்.
13) நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதி குயவர்பாளையம் பகுதியில் உள்ள சுந்தர மேஸ்திரி வீதி, ஏழை மாரியம்மன் கோயில் வீதி, காமராஜர் வீதி வாணிதாசன் வீதி பிள்ளையார் கோயில் தெரு , பகத்சிங் வீதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வீதி, மேட்டு தெரு, நவீன கார்டன் உட்பட பல்வேறு பகுதிகளில் தண்ணீரின் TDS அளவு 4000 வரை உள்ளதால் அனைத்து இடங்களிலும் புதிய குடிநீர் பைப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
14)அரவிந்தர் ஆசிரமத்திற்கு சொந்தமான எல்லைப் பிள்ளை சாவடி, மற்றும் புவன் கரே வீதியில் உள்ள அவரது தோட்டங்களில் இருந்து மழைக் காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் அந்த தண்ணீர் வெளியேற்றப்படுவதால் நல்ல பாதிப்பு அதிகமாக உள்ளது எனவே இதனை தடுத்திட மாற்று நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை மேற்கொள்ள வேண்டும்
15) அண்ணா நகர், திருமால் நகர், டி ஆர் நகர், வேல்முருகன் நகர், ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் அதிகப்படியான வெள்ள நீர் தேங்குவதை தடுக்க உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்..
முக்கிய நிர்வாகிகள் சங்கர் உடையார், வெங்கடேசன், குப்புசாமி உடையார், புகழ் பாரி, முனிரத்தினம், தம்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்