பெங்களூரு ராஜேஸ்வரி நகரில் பல ஆண்டுகளாக யோகா பயிற்சி மையம் நடத்தி வரும் நிரஞ்சன மூர்த்தி என்பவரின் மீது வழக்குப்பதிவு செய்த பெண், இவரிடம் யோகா பயிற்சிக்கு வந்த தனக்கு (17 )வயதில் பாலியல் தொந்தரவு அளித்ததாக, கூறியுள்ளார். அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் நிரஞ்சன மூர்த்தியை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் அளித்த புகாரில், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நிரஞ்சன மூர்த்தி தனக்கு யோகா பயிற்சி அளித்து வருவதாக தெரிவித்தார். மேலும் நிரஞ்சன மூர்த்தி கர்நாடக யோகாசன சபையின் செயலாளராக இருந்து வருவதாகவும் தெரிவித்தார். முதல் யோகா போட்டிகளில் 2021 ஆம் ஆண்டு கலந்து கொண்டேன். பின்னர் 2023ம் ஆண்டில் யோகா போட்டியில் கலந்து கொள்வதற்காக தாய்லாந்துக்கு நிரஞ்சன மூர்த்தியுடன் சென்றிருந்தேன். அந்நேரத்தில் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு யோகா போட்டிகளில் கலந்து கொள்வதை நிறுத்தி விட்டேன். பின்னர் சன்ஷைன் என்ற யோகா மையத்தில் 2024-ல் சேர்ந்து போட்டிகளில் கலந்து கொள்ள முயற்சி செய்தேன். அந்த மையம் நிரஞ்சன மூர்த்திக்கு சொந்தமானது. மீண்டும் 2024 ஆம் ஆண்டு நிரஞ்சன மூர்த்தி என்னிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார். அவர் என்னிடம் தேசிய அளவிலான யோகா போட்டிகளில் பதக்கம் வெல்ல உதவுவதாக கூறி 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சன்ஷைன் யோகா பயிற்சி மையத்தில் தெரிவித்தார். பின்னர் வேலையிலும் சேர்த்து விடுவதாக வாக்குறுதிகளை அளித்துவிட்டு என்னை பாலியல் பலாத்காரம் செய்தார் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து.போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகயிருந்த நிரஞ்சன மூர்த்தியை போலீசார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர்.
இதையும் படிங்க: 14 வயது சிறுமிக்கு பிரசவம்; லிப்ட் கொடுப்பதாக இளைஞன் அதிர்ச்சி செயல்.!
இதையும் படிங்க: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் டெல்லி போலீசாரால் அதிரடி கைது.! ஏன்? என்ன நடந்தது??