மணமகள் புத்துணர்ச்சி தரும் மஞ்சள் – கற்றாழை பேஸ் பேக்
தேவையான பொருட்கள்
கற்றாழை (அலோவேரா ஜெல்) – 2 கரண்டி
கஸ்தூரி மஞ்சள் – ½ டீஸ்பூன்
பால் – 1 கரண்டி
தேன் – 1 டீஸ்பூன்
செய்வது எப்படி?
கற்றாழை ஜெலுக்கு கஸ்தூரி மஞ்சள், பால், தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் விடவும்.
பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
நன்மைகள்
முகத்தை இயற்கையாக பிரகாசமாக காட்டும்.
பிம்பிள், கரும்புள்ளி, முகக்குரு குறையும்.
தோல் மென்மையாக மாறும்.
சோர்வான முகத்துக்கு புத்துணர்ச்சி தரும்.