Robo Shankar: கணவரின் இறுதி ஊர்வலத்தில் நடனமாடிய மனைவி; வளசரவாக்கத்தில் ரோபோ சங்கர் உடல் தகனம்!
Vikatan September 20, 2025 12:48 PM

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் (செப்டம்பர் 17) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று (செப்டம்பர் 18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

ரோபோ சங்கர் இறுதி ஊர்வலம்

மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகரும் எம்.பி-யுமான கமல்ஹாசன், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் எனத் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் ரோபோ சங்கர் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து மாலையில், வளசரவாக்கத்திலுள்ள அவரது இல்லத்திலிருந்து அவரது உடல் இறுதி ஊர்வலம் கொண்டுசெல்லப்பட்டது.

அப்போது, ரோபோ சங்கரின் மனைவி தன் கணவரின் இறுதி ஊர்வலத்தில் நடனமாடினார்.

பின்னர், வளசரவாக்கம் மின்மயானத்தில் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

ரோபோ சங்கர் மறைவு: `இளம் வயதில் உடல் பாதிக்க இதுதான் காரணம்' - நடிகர் இளவரசு
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.