Live: ரோபோ சங்கர் மறைவு: "நல்ல மனிதர்; அவருடனான நினைவுகள் மறக்க முடியாதவை" - விஷால் இரங்கல்
Vikatan September 20, 2025 10:48 AM
"நல்ல மனிதர்; அவருடனான நினைவுகள் மறக்க முடியாதவை" - விஷால் இரங்கல் விஜயபிரபாகரன் விஜய பிரபாகரன்

ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது. நம்பவே முடியவில்லை. எப்போதும் எல்லோரையும் சிரிக்க வைப்பவர், இப்போது தமிழ்நாட்டையே அழவைத்துவிட்டார். கேப்டன் போல நடித்து காமெடி லெஜண்ட்டாக உருவானவர் ரோபோ சங்கர். அப்பாவின் மறைவிற்கு பிறகு அடிக்கடி அவரின் நினைவிடத்திற்கு வந்து அண்ணதானம் கொடுப்பார். எங்களுடன் சில விஷயங்களைப் பேசி செல்வார். இன்றைக்கு அவர் நம்முடன் இல்லாதது கஷ்டமான ஒரு விஷயமாக இருக்கிறது. ஒரு அண்ணனாகவோ, தம்பியாகவோ அவர்களுடைய குடும்பத்திற்கு நாங்கள் துணை நிற்போம். தயவுசெய்து எல்லோரும் அவரவர் உடல்நிலையைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

தேமுதிக தலைவர் பிரேமலதா விஜய்காந்த் நடிகர் விஜய் சேதுபதி ஹெச்.ராஜா நடிகர் ஹரிஷ்கல்யான் நடிகர் சசிகுமார் சாந்தனு பாக்கியராஜ் நடிகர் அருள் நிதி நடிகர் சரத்குமார் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நடிகர் கவின் ராகவா லாரன்ஸ்

ரோபோ சங்கரின் மறைவு குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். பொழுதுபோக்கு துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். - ராகவா லாரன்ஸ்

ஐஸ்வர்யா ராஜேஷ் அருண் விஜய் நடிகை சிம்ரன் இரங்கல்

மில்லியன் கணக்கானவர்களுக்கு புன்னகையை அளித்த திறமைசாலி ரோபோ சங்கரின் மறைவால் மிகவும் வருத்தமடைந்தேன். உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவோம். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு பிரார்த்தனைகளும் பலமும் கிடைக்கட்டும். ஓம் சாந்தி - நடிகை சிம்ரன்

நடிகர் ரவி மோகன் இரங்கல்

நடிகர் ரவி மோகன் எக்ஸ் பக்கத்தில், `ரோபோ சங்கர்' என்ற கலைஞரின் திடீர் மறைவு எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. ஒரு சிறந்த திறமையாளர் மிக விரைவில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், அன்பானவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.' எனப் பதிவிட்டிருக்கிறார்.

இயக்குநர் சுரேஷ்காமாட்சி இரங்கல் தவெக தலைவர் விஜய் இரங்கல் எம்.எஸ்.பாஸ்கர் இரங்கல் எம்.எஸ். பாஸ்கர்

எம்.எஸ்.பாஸ்கர் பேசியப்போது, " ரொம்ப வருத்தமான விஷயம் இது. ஒரு இனிமையானக் குணம் கொண்ட ஒரு தம்பி. ஆரம்பகாலத்தில் இருந்து அவரது உடலைக்கட்டுக்கோப்பாக வைத்திருந்து ரோபோ மாதிரி நடித்ததையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன் ரசித்திருக்கிறேன். அவருடன் நல்லப் பழக்கம் எனக்கு இருக்கிறது. தங்கமானக் குணமுடையவர். நாங்கள் எல்லோரும் கோவா போயிருந்தோம். உடல்நலக் குறைவால் அப்போது மிகவும் மெலிந்துதான் இருந்தார். அவரது மனைவிதான் உடன் இருந்து பார்த்துக்கொண்டார்கள். இறந்ததற்கு பிறகு இதுதான் காரணம், அதுதான் காரணம் என்று சொல்வதில் எந்த பயனும் இல்லை. அவருக்கு இந்த பூமியில் வாழ்வதற்கு விதிக்கப்பட்ட காலம் அவ்வளவுதான். அவரின் இந்தப் பிறப்பு போதும் என்று இறைவன் முடிவு எடுத்திருக்கிறார். அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன், ``2003-ம் ஆண்டு எங்கள் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போதுமுதல் அவர் எங்களுக்கு ஊக்கமளிக்கும் சின்னமாக இருந்தார். ரோபோ சங்கர் அண்ணா எங்களை விட்டுச் செல்வதைப் பார்ப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் பிரார்த்தனைகள்." எனத் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் கார்த்தி இரங்கல் நடிகர் கார்த்தி

ரோபோ சங்கரின் மறைவுக்கு நடிகர் கார்த்தி தன் எக்ஸ் பக்கத்தில், ``காலப்போக்கில் அழிவுகரமான தேர்வுகள் ஆரோக்கியத்தை எவ்வாறு அழிக்கும் என்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. ஒரு சிறந்த திறமை இவ்வளவு விரைவாக மறைந்துவிட்டது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்." எனப் பதிவிட்டிருக்கிறார்.

ராதாரவி இரங்கல் ரோபோ சங்கர்

ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ராதா ரவி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ``அன்பு சகோதரர் ரோபோ சங்கருக்கு உடல் நலமில்லைனு தெரியும். ஆனா இவ்வளவு இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல. எல்லோரிடமும் அன்பாக இருப்பார். அவர் கோபப்பட்டு பார்த்ததே இல்லை. டைமிங் காமெடியில் அற்புதமான நபர். அவரின் இழப்பு பெரிய திரைக்கு மட்டுமல்ல சின்னத்திரைக்கும் இழப்புதான்." என்றார்

நடிகர் சிம்பு இரங்கல் டிடிவி தினகரன் இரங்கல் அண்ணாமலை இரங்கல் திருமாவளவன் இரங்கல் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி ரோபோ சங்கர் இல்லத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, வளசரவாக்கம் பகுதியில் நடிகர் ரோபோ சங்கரின் இல்லத்தில், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் பிரபலங்களின் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் நடிகர் ரோபோ சங்கரின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரோபோ சங்கரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜன், “சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமாக விளங்கிய திரைப்படக் கலைஞர் ரோபோ சங்கரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

திரைப்படத்துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி இரங்கல் எடப்பாடி பழனிசாமி

``பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகரும், கழக நட்சத்திரப் பேச்சாளருமான ரோபோ சங்கர், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

சிறு சிறு விழா மேடைகளில் தொடங்கி, தொலைக்காட்சி, வெள்ளித்திரை என தனது தனித்துவ நடிப்புத் திறமையால் படிப்படியாக முன்னேறி வந்து, தனது இயல்பான நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்த அன்புச் சகோதரர் ரோபோ சங்கரின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத்துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ரோபோ சங்கர் மறைவு: ரோபோ சங்கர்

ரோபோ சங்கர் தனியார் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியில் மிமிக்ரி கலைஞராக அறிமுகமாகி, 2007-ம் ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான தீபாவளி படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகமானார்.

சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தோன்றியதன் மூலம் தமிழகமெங்கும் உள்ள வீடுகளில் இடம்பிடித்தார்.

அதன்பின், வெள்ளித்திரையிலும் அசத்தினார். விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், தனுஷின் மாரி உள்பட பல்வேறு படங்களில் நடித்து புகழடைந்தார்.

தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்த ரோபோ சங்கர், சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரோபோ சங்கர்

தீவிர சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்தார். ஆனால், மீண்டும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், கல்லீரல் மற்றும் சீறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ரோபோ சங்கர் மறைவுக்கு திரையுலகினர், கலையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.