தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது. பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ள நிலையில், இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு துவங்குகிறது. இதுவரையில் டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள் சொந்த ஊருக்கு செல்லும் இந்த வாய்ப்பைத் தவற விடாதீங்க.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி (ரெயில் எண். 06151/06152):- டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரெயில் (ரெயில் எண். 06151) செப்டம்பர் 22, 29, அக்டோபர் 06, 13, 20, 2025 (திங்கட்கிழமைகளில்) இரவு 11.50 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
மறுமார்க்கத்தில், கன்னியாகுமரி - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரெயில் (06152) செப்டம்பர் 23, 30, அக்டோபர் 07, 14, 21 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலை சென்றடையும்.
திருநெல்வேலி – செங்கல்பட்டு (ரெயில் எண். 06154/06153):- அதேபோல், திருநெல்வேலி – செங்கல்பட்டு இடையே வாரம் இருமுறை சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயில் (06154) இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் செப்டம்பர் 26, 28, அக்டோபர் 03, 05, 10, 12, 17, 19, 24, 26 (வெள்ளிக்கிழமை) மற்றும் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், செங்கல்பட்டு – திருநெல்வேலி இடையே வாரம் இருமுறை சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயில் (06153) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் செப்டம்பர் 26, 28, 3, அக்டோபர் 5, 10, 12, 17, 19, 24, 26 (வெள்ளிக்கிழமை) & (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு அன்று இரவு ௧11.55 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?