நாதக கட்சியில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் காளியம்மாள் விலகினார். இதன்பின்னர் அவர் திமுகவில் இணைய போகிறார், தவெகவில் இணையவுள்ளார் போன்ற பல தகவல்கள் பரவி வந்தன. இதற்கெல்லாம் பிடிகொடுத்து பேசாமல் இருந்த அவர் விரைவில் தனது முடிவை அறிவிப்பேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் காளியம்மாள் இன்று (செப்.20) தவெக தலைவர் விஜயின் நாகப்பட்டினம் சுற்றுப்பயணத்தின் போது அவர் முன்னிலையில் கட்சியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.