TVK Vijay: தவெக தலைவர் விஜய் தன்னுடைய சுற்றுப்பயணத்தில் இன்று நாகைக்கு சென்று இருக்கும் நிலையில் அங்கிருந்து கிடைக்கும் கள விவரங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர் நடிகர் விஜய். திடீரென தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இருந்து வெளியேறி அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக அறிவித்தார். அதற்கான கட்சி பெயர் முதல் மாநாடு என எல்லாமே பிரம்மாண்ட அறிவிப்பாக இருந்தது.
சமீபத்தில் கட்சியின் மாநில மாநாடு மதுரையில் நடந்தது. அதில் பேசிய விஜய் மக்களை சந்திக்க நேரில் வருவதாக தெரிவித்து இருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். அந்த வகையில் கடந்த வாரம் திருச்சி, அரியலூர் உள்ளிட்ட இடங்களில் கலந்து கொண்டார்.
அங்கு எதிர்பார்க்காத வகையில் கூட்டம் அலைமோதியது. தன்னுடைய ரசிகர்களிடம் உரையாடியது முதல் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தது வரை தலைவராக விஜய் மற்றவர்களை விட சற்று உயர்ந்து விட்டார் என்றே சொல்லலாம். எங்குமே தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள அவர் விரும்பவில்லை.
அதிலும் நள்ளிரவை தாண்டி பெரம்பலூரில் கூட்டம் அலைமோதியது. அங்கு சென்று பேசி பிரச்னையாகி அதை தன்னுடைய அரசியல் லாபத்துக்கு பயன்படுத்த நினைக்கவில்லை. பலரின் பாதுகாப்பு கருதியே அதை ரத்து செய்தார்.
இன்று நாகை சுற்றுப்பயணத்தின் போது கூட காலையில் இருந்தே கூட்டம் அலைமோதுகிறது. நாகையில் ஏற்கனவே விஜயிற்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு. கிட்டத்தட்ட விஜயின் கோட்டை என்றுதான் சொல்ல வேண்டும். அதை மீண்டும் நிரூபிக்கும் விதமாக இன்றும் கூட்டம் அதிகளவில் உள்ளது.
தொடர்ச்சியாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் நாகை மக்களுக்கு பல வருடமாக விஜயின் மீதான ஆதரவு அதிகம். இதற்கு முன்னரே நாகை மீனவர்களுக்காக போராட்டம் செய்து இருக்கிறார். இதனால் அவர்களுடனான பிணைப்பில் அதிகம் இருந்து வருகிறார். அதனால் தான் இரண்டாவது மீட்டிங்கே நாகை பக்கம் வந்துவிட்டார்.
தொடர்ச்சியாக விஜயின் மீதான அரசியல் ஆதரவு எகிறிக்கொண்டே இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இனி வரும் சனிக்கிழமைகள் இன்னும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.